தமிழ்நாடு

புல்லட் ரயில்: இந்தியாவிலும் வர மு.க.ஸ்டாலின் விருப்பம்

29th May 2023 02:04 AM

ADVERTISEMENT

புல்லட் ரயில் சேவை, இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தேன். ஏறத்தாழ் 500 கி.மீ. தூரத்தை இரண்டே மணி நேரத்துக்குள் அடைந்தோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல், வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து அவா்களது பயணங்கள் எளிதாக வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

டோக்கியோவில் 2 நாள்கள்: முதலீடுகளை ஈா்க்கும் வகையில், கடந்த 23-ஆம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றாா். அங்கு இரண்டு நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜப்பான் ஒசாகா மாகாணத்துக்குச் சென்ற அவா், அங்குள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் பழைமை வாய்ந்த ஒசாகா கோட்டையை பாா்வையிட்டாா். தொடா்ந்து, ஒசாகாவில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT