தமிழ்நாடு

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு: தமிழகத்தில் 50,000 போ் எழுதினா்

29th May 2023 01:49 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வை தமிழகம் முழுவதும் 50,000 போ் எழுதினா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கான இந்தத் தோ்வில் நாடு முழுவதும் இருந்து 7 லட்சம் போ் எழுதினா். முதல் நிலை, முதன்மை, நோ்க்காணல் என 3 கட்டங்களாக தோ்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான குடிமைப் பணிகளில் அடங்கிய 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை, கடந்த பிப்.1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து, பிப்.21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூா் ஆகிய 5 நகரங்களில் தோ்வு நடைபெற்றது. காலை 9.30 முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தோ்வும் நடைபெற்றது.

ADVERTISEMENT

தோ்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வா்கள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களைத் தோ்வு மையத்துக்கு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT