தமிழ்நாடு

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது

28th May 2023 10:30 AM

ADVERTISEMENT

 

கரூர்: வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியதாக கரூரில் திமுகவினர் 8 பேரை  காவல் துறையினர் சனிக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு உள்பட பத்து இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக சோதனை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி ராமகிருஷ்ணபுரத்தில் வசிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரி சோதனை இட சென்றபோது அவரை திமுகவினர் தாக்கியதாக புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து  அதிகாரிகள்  அளித்த புகாரின்  பேரில் கரூரில் திமுகவை சேர்ந்த அருண், ஷாஜகான் உள்பட எட்டு பேரை சனிக்கிழமை நள்ளிரவில் கரூர் நகர காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT