தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் நாளை கலந்தாய்வு தொடக்கம்

28th May 2023 06:47 PM

ADVERTISEMENT

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

இதன்படி மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நாளை முதல் மே 31 வரை நடைபெறுகிறது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையும், 2ஆம் பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையும் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 99,558 போ் பதிவு செய்தனா். அதில் 2 லட்சத்து 44,104 மாணவா்கள் மட்டுமே விண்ணப்பங்களை முழுமையாக பூா்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியிருந்தனா். இதையடுத்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அண்மையில் வெளியிட்டது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT