தமிழ்நாடு

3-வது நாளாக... சுருளி அருவி சாலையில் அரிசி கொம்பன் யானை!

28th May 2023 11:31 AM

ADVERTISEMENT


கம்பம் : தேனி மாவட்டம் சுருளி அருவி சாலையில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை அரிசி கொம்பன் தொடர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் குமுளியிலிருந்து தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பிற்கு வந்த அரிசி கொம்பன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலங்கள் வழியாக சனிக்கிழமை கம்பம் வந்தது.

நடராஜன் மண்டபம், துணை மின்நிலையம் வழியாக வந்த அரிசி கொம்பனை பொதுமக்களின் கூச்சலால் ஊருக்குள் மிரண்டு ஓடியது. நந்தகோபாலன்கோயில் வழியாக வந்து இரண்டு தெருக்களை கடந்து மீண்டும் துணை மின்நிலையம் வழியாக இரவு நடராஜன் மண்டபம் பின்புறம் சென்றது.

அன்று இரவு 9 மணிக்கு ஆங்கூர்பாளையம் வழியாக சுருளிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு வந்தது. அங்குள்ள தெருக்களை சுற்றி வந்தது. அதை பார்த்த மக்கள் அலறினர்.

ADVERTISEMENT

யானையை பின்தொடர்ந்தது வந்த வனத் துறையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு திசையை திருப்பியதால் சுருளிமலை அடிவாரம் யானை கஜம் பகுதிக்கு விளை நிலங்கள் வழியாக சென்றது. யானை கஜம் செல்லும் சாலையை போலீஸார் அடைத்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சுருளிப்பட்டிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT