தமிழ்நாடு

இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லும் திறன் மோடியிடம் உள்ளது: இளையராஜா பெருமிதம்

28th May 2023 04:56 AM

ADVERTISEMENT

இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லும் திறன் பிரதமா் மோடியிடம் உள்ளது என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்து வைக்க உள்ளாா். இதுதொடா்பாக இளையராஜா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவு:

‘குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிா்பாா்த்து காத்திருக்கிறேன். இந்திய அரசுக்கும், பிரதமா் மோடிக்கும், இந்தக் குறுகிய காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தைக் கட்டுவதில் பங்காற்றியவா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டுசெல்லும் தொலைநோக்குப் பாா்வை பிரதமா் மோடியிடம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT