தமிழ்நாடு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவராக த.ஸ்டாலின் குணசேகரன் தேர்வு

DIN

தமிழகத்தின் முன்னணி  பதிப்பகங்களில் ஒன்றான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவராக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன சேவைப் பணிகளுடன் தன்னை பள்ளிக் காலத்திலிருந்தே ஈடுபடுத்திக் கொண்டவர் த.ஸ்டாலின் குணசேகரன். இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார். வாசகர்களின் வாசிப்பை வளப்படுத்தும் விதத்தில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பல மக்கள் இயக்கங்களை இவர் நடத்தி வருகிறார்.

கடந்த 18 ஆண்டுகளாக இவர் நடத்திவரும் ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர்களிடம் தனிப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் ரூ. 5 லட்சத்தில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் புதிய நூலகக் கட்டடம் கட்டி அதற்கு 6,000 புதிய புத்தகங்களை வழங்கியுள்ளார்.

இதேபோன்று பல நூலகங்கள் உருவாவதற்கு இவர் காரணமாக இருந்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் சிந்தனைப் பேரவையின் வாசகர் வட்டம் தொடங்கி அவற்றை வழிநடத்தி வருகிறார்.

இவர் தனது இல்லத்தில் சுமார் 20,000 நூல்களைக் கொண்ட நூலகம் வைத்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 'விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற இவரது தொகுப்புநூல் தமிழகத்தின் முக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.

புதிய நிர்வாக இயக்குநராக க.சந்தானம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் குணசேகரனுக்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைவர் பொறுப்பை வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT