தமிழ்நாடு

தாய் இறந்த சோகம்: மகன் தற்கொலை

26th May 2023 05:41 AM

ADVERTISEMENT

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தாய் இறந்த சோகத்தில், மகன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

புது வண்ணாரப்பேட்டை கிராஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அசோகன். இவரது மனைவி நாகேஸ்வரி (58). இத் தம்பதியின் மகன்கள் நவீன் (34), விவேக் (32).

இந்த குடும்பம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறது. அசோகனும், நாகேஸ்வரியும், தங்களது மகன்களுக்கு திருமணம் செய்ய பெண் தேடியும் சரியான வரன் அமையவில்லை.

இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. மேலும் அசோகனுக்கும்,நாகேஸ்வரிக்கும் இடையே இது தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாகேஸ்வரி, கடந்த புதன்கிழமை வீட்டில் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

தாயை இழந்ததால் இளைய மகனான விவேக், மிகுந்த சோகத்துடன், விரக்தியுடன் காணப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் விவேக், வியாழக்கிழமை அதிகாலை காசிமேடு நாகூரான் தோட்டம் பள்ளம் அருகே தனது உடலின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விவேக் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT