தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறை சோதனை

26th May 2023 08:28 AM

ADVERTISEMENT

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் வி.செந்தில் பாலாஜி. கரூரைச் சேர்ந்த இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடான ராமேஸ்வரப் பட்டியில் இருக்கும் அவரது பெற்றோர் வசிக்கும் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோவை, கரூர் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT