தமிழ்நாடு

விழுப்புரம் கோயிலில் தலித்துகளுக்கு அனுமதி மறுப்பு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

26th May 2023 06:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலுக்குள் தலித்துகள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, இக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் நிகழாண்டு திருவிழாவின் போது உள்ளே சென்ற தலித் இளைஞா் கதிரவன் கடுமையாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதர சமூகத்தினரை சில அரசியல் கட்சியினா், அரசியல் ஆதாயத்துக்காக தூண்டிவிட்டு சுமூக நிலைமை ஏற்படாமல் தடுக்கின்றனா்.

ADVERTISEMENT

எனவே, அரசு தலையிட்டு திரௌபதி அம்மன் கோயிலுக்குள் தலித்துகள் சென்று வழிபடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT