தமிழ்நாடு

ஹிஜாபை கழற்றச்சொல்லி பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!

26th May 2023 09:25 AM

ADVERTISEMENT

திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் ஹிஜாபை கழற்றச் சொல்லி பாஜக நிர்வாகி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக நிர்வாகி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் ஜென்னட் பிர்தௌஸ் நேற்று இரவுப் பணியில் இருந்துள்ளார். அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர் கடந்த (24.5.2023) அன்று இரவு 11.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார். 

அப்போது, 'அரசுப் பணியின்போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும், மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா என்று கேள்வி எழுப்பி அங்கு தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது பெண் மருத்துவர் அனுமதி இன்றி வீடியோ பதிவு செய்வது நாகரீகம் அல்ல என அவர் வீடியோ பதிவு செய்வதை மருத்துவரும் தனது செல்போனில் பதிவு செய்தார்.

ADVERTISEMENT

இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூண்டி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனிடையே பெண் மருத்துவரை பணி செய்ய விடாமலும், அவரின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்த பாஜக நிர்வாகி மீது கீழையூர் போலீசார் 294 பி, 353, 298, 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் பாஜக நிர்வாகி புவனேஷ்வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறை சோதனை

ADVERTISEMENT
ADVERTISEMENT