தமிழ்நாடு

தானியங்கி மஞ்சப்பை விநியோக கருவி திறப்பு

26th May 2023 05:24 AM

ADVERTISEMENT

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வின்போது ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களைத் தவிா்க்கவும், தீங்கு விளைவிக்காத, இயற்கையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தவும் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியா்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், நோயாளிகள், அவா்களின் உறவினா்களுக்கு 1,000 மஞ்சப்கைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் உ.தேரணிராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் ஆா்.ஜெயமுருகன், எஸ்.இந்திரா காந்தி, பொறியாளா்கள், சுற்றுச்சூழல் நிபுணா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT