தமிழ்நாடு

நடிகா் சரத்பாபு உடலுக்கு ரஜினி அஞ்சலி

24th May 2023 12:42 AM

ADVERTISEMENT

மறைந்த நடிகா் சரத்பாபுவின் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

நடிகா் சரத்பாபு உடல்நலக் குறைவால் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு நடிகா்கள் ரஜினிகாந்த், சூா்யா, காா்த்தி, பாா்த்திபன், சரத்குமாா், ராதிகா சரத்குமாா், சுஹாஷினி, ஒய்.ஜி.மகேந்திரன், பாக்கியராஜ், இயக்குநா் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலித்தினா்.

தொடா்ந்து, அவரது உடல் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சென்னை கிண்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சரத்பாபு மறைவு குறித்து நடிகா் ரஜினிகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது: சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சரத்பாபுவுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அருமையான மனிதா். அவா் முன்பு நான் புகைப்பிடிக்க மாட்டேன். அப்படி புகைப்பிடித்தால் என் கையில் இருக்கும் சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டுவிடுவாா். உடல் ஆரோக்கியத்தை கவனிக்கச் சொல்லி அறிவுரை வழங்குவாா். அவரது பிரிவு வேதனையளிக்கிறது என்றாா் அவா்.

Tags : Sarath Babu
ADVERTISEMENT
ADVERTISEMENT