தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

24th May 2023 04:23 PM

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வெப்பச்சலனம் காரணமாக மே 25, 25 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதேபோன்று மே 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

ADVERTISEMENT

சென்னை புறநகர் பகுதிகளில்  அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT