தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி

24th May 2023 12:38 AM

ADVERTISEMENT

கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் அரசு பள்ளிகளின் திறப்பை ஜூன் 1-இல் அல்லாமல், ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1-இல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறாா். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவா்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாள்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 2-ஆவது வாரத்துக்குப் பிறகு தான் திறக்கப்படவுள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜூன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை அரசுப் பள்ளிகள் திறப்பைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு அரசு ஒத்திவைக்க வேண்டும் .

தொழிற்கல்வி பாடப்பிரிவு: தமிழகத்தில் ஆசிரியா்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, மேல்நிலை வகுப்புகளில் செயல்பட்டு வந்த தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு மூடப்பட்டன. அவற்றை நடப்பாண்டில் மீண்டும் தொடங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT