தமிழ்நாடு

நான் சிகரெட் பிடித்தால்.. சரத்பாபு பற்றி மனம் திறந்த ரஜினிகாந்த்

23rd May 2023 10:54 AM

ADVERTISEMENT

சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் சரத்பாபு உடலுக்கு ரஜினிகாந்த் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலப் பிரச்னை காரணமாக நடிகர் சரத்பாபு நேற்று காலமானார்.  சென்னை தி.நகரில் உள்ள இல்லத்துக்கு சரத்பாபுவின் உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சரத்பாபு இல்லத்துக்கு வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், சரத்பாபு அருமையான மனிதர், நல்ல நண்பர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் என்று கூறினார். மேலும், நானும் சரத்பாபுவும் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்டான படங்கள். படப்பிடிப்பின்போது, நான் சிகரெட் பிடிக்கும்போதெல்லாம், அவர் அன்போடு கடிந்துகொள்வார். அதோடு, சிகரெட்டை பிடுங்கி கீழேப் போட்டு அணைத்துவிடுவார் என்று ரஜினிகாந்த் கூறினார்.

ADVERTISEMENT

சரத்பாபுவுடன், நடிகர் ரஜினிகாந்த், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இணைந்த நடித்த பல படங்கள் வெற்றிப்படங்களாகவும் இருந்துள்ளன. 

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகா் சரத்பாபு மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, நடிகா் ரஜினிகாந்த், தேமுதிக தலைவா் விஜயகாந்த், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT