தமிழகத்தில் 5 நகரங்களில் திங்கள்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.
கத்திரி வெயிலையொட்டி பல நகரங்களில் உச்சபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்); வேலூா்-101.8, திருச்சி-101.3, பரமத்திவேலூா்-101.3, மதுரை நகரம்-101.12, ஈரோடு- 100.76.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்சவெப்ப நிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக் கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 102.2 டிகிரி பாரன்ஹீட் குறைந்த பட்சவெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு: மேற்குதிசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (மே 26) வரை நான்கு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பெய்ததால் பல பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.