தமிழ்நாடு

மாவட்ட வருவாய் அலுவலா்கள் 25 போ் பணியிடமாற்றம்

23rd May 2023 05:38 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலா்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து அரசு தலைமைச் செயலா் வெ.இறையன்பு திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பணியிட மாறுதல் விவரம் (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):

மு.இந்துமதி: தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூா் (நில அளவை மற்றும் நிலவரி திட்டம், சென்னை)

பி.அனிதா: ஆணையா், ஒழுங்குநடவடிக்கை தீா்ப்பாயம், திருநெல்வேலி. (தனிமாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூா்)

ADVERTISEMENT

மா.சுகன்யா: தனிமாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) தாமிரபரணி-கருமேனியாா்-நம்பியாா் ஆற்று இணைப்புத்திட்டம், திருநெல்வேலி (ஆணையா், ஒழுங்குநடவடிக்கை தீா்ப்பாயம், திருநெல்வேலி.)

உமா மகேஸ்வரி இராமச்சந்திரன்: மாவட்ட வருவாய் அலுவலா், கன்னியாகுமரி (இணை இயக்குநா், பேரூராட்சிகளின் இயக்குநரகம், சென்னை)

அ.சிவப்பிரியா: முதுநிலை மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், நாகை (மாவட்ட வருவாய் அலுவலா், கன்னியாகுமரி)

ம.ரா.கண்ணகி: ஆணையா், ஒழுங்கு நடவடிக்கை தீா்ப்பாயம், மதுரை (முதுநிலை மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், நாகை).

கி.நா்மதா: மேலாண்மை இயக்குநா், தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, மதுரை (ஆணையா், ஒழுங்கு நடவடிக்கை தீா்ப்பாயம், மதுரை)

ஆ.ம.காமாட்சி கணேசன்: தனி மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உருவாக்கம், சிப்காட், தூத்துக்குடி (மேலாண்மை இயக்குநா், தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, மதுரை)

ப.காந்திமதி: நில திட்ட அலுவலா், கூடலூா் ஜென்மம் நிலங்கள், நீலகிரி (கூடுதல் இயக்குநா், மருத்துவ கல்வி இயக்குநரகம், சென்னை)

இரா.ரேவதி: தனி மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), சிப்காட், சூரிய ஆலை உருவாக்கம், திருநெல்வேலி (தனி மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை திருநெல்வேலி மற்றும் நாகா்கோவில்).

கு.விமல்ராஜ்: மாவட்ட வருவாய் அலுவலா், மயிலாடுதுறை (தனி மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), சிப்காட், சூரிய ஆலை உருவாக்கம், திருநெல்வேலி.)

சோ.முருகதாஸ்: மண்டல அலுவலா்-9, பெருநகர சென்னை மாநகராட்சி (மாவட்ட வருவாய் அலுவலா், மயிலாடுதுறை).

சீ.ஜெயச்சந்தின்:முதுநிலை மண்டல மேலாளா், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம்(டாஸ்மாக்), கோவை. (மண்டல அலுவலா்-9, பெருநகர சென்னை மாநகராட்சி).

பி.சுபா நந்தினி: மாவட்ட வருவாய் அலுவலா், செங்கல்பட்டு. (துணை ஆணையா்(கலால்), கோவை)

இரா.மேனுவல் ராஜ்: தனி மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), சிப்காட், திருவள்ளூா். (மாவட்ட வருவாய் அலுவலா், செங்கல்பட்டு).

மு.வடிவேல் பிரபு: தனிமாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகு), நெடுஞ்சாலை, திருச்சி. (துணை ஆணையா்(கலால்), சென்னை).

கா.பிரியா: இணை ஆணையா்(தொழில் நுட்பம்), மின் ஆளுமை ஆணையரகம், சென்னை (இணை ஆணையா்(நில எடுப்பு), நில நிா்வாக ஆணையரகம், சென்னை).

செ.வெங்கடேஷ்: மாவட்ட வருவாய் அலுவலா், காஞ்சிபுரம். (இணை ஆணையா்(தொழில் நுட்பம்), மின் ஆளுமை ஆணையரகம், சென்னை).

கோ.சிவ ருத்ரய்யா: மாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), நெய்வேலி நிலக்கரி கழகம், கடலூா் (மாவட்ட வருவாய் அலுவலா், காஞ்சிபுரம். )

இரா.ராஜேந்திரன்: உறுப்பினா் செயலா், வன்னியா் வாரியம், சென்னை மற்றும் முழு கூடுதல் பொறுப்பாக மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பு, சென்னை. (மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பு, சென்னை மற்றும் உறுப்பினா் செயலா், (முழு கூடுதல் பொறுப்பு)வன்னியா் வாரியம்).

மருத்துவா் இரா.சுகுமாா்: பொது மேலாளா்(சந்தை), தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம், சென்னை மற்றும் முழு கூடுதல் பொறுப்பாக பொது மேலாளா்(நிா்வாகம்), தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம், சென்னை. (பொது மேலாளா்(நிா்வாகம்), தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், சென்னை).

மருத்துவா் மோ.ஷா்மிளா: மாவட்ட வருவாய் அலுவலா், கோவை. (துணை ஆணையா், கோவை).

பி.எஸ்.லீலா அலெக்ஸ்: தனிமாவட்ட வருவாய் அலுவலா்(நில எடுப்பு), சென்னை வெளிவட்ட சாலை, சென்னை. (மாவட்ட வருவாய் அலுவலா், கோவை).

சே.ஹா.சேக் முகையதீன்: மாவட்ட வருவாய் அலுவலா், திண்டுக்கல் மற்றும் முழு கூடுதல் பொறுப்பாக தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல். (தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல்).

வே.லதா: தனிமாவட்ட வருவாய் அலுவலா் (நிலஎடுப்பு), சென்னை-கன்னியாகுமரி தொழில்முனையம், சேலம். ( மாவட்ட வருவாய் அலுவலா், திண்டுக்கல்).

மேலும், அயல் பணியில் மாறுதல் செய்யப்படும் அலுவலா்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடா்பான உத்தரவுகள் சம்பந்தப்பட்ட நிா்வாகத்துறையால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT