தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:வைகோ

23rd May 2023 05:38 AM

ADVERTISEMENT

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2011-12-ஆம் கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15,169 பகுதி நேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்கள் உடற்கல்வி, கணினிப் பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி 12 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனா். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று, பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT