தமிழ்நாடு

ஜூன் 27-இல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தோ்வு:இன்றுமுதல் விண்ணப்பப் பதிவு

23rd May 2023 02:27 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தோ்வுகளில் தோ்ச்சி பெறாதவா்களுக்கான சிறப்பு துணைத் தோ்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு செவ்வாய்க்கிழமை (மே 23) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தோ்வுத் துறை இயக்குநா் சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 1 வகுப்புக்கான துணைத் தோ்வு அட்டவணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வுகளைப் பொருத்தவரை ஜூன் 27-ஆம் தேதி மொழிப் பாடம், ஜூன் 28-இல் ஆங்கிலம், ஜூன் 30-இல் கணிதம், ஜூலை 1-இல் விருப்ப மொழி பாடம், ஜூலை 3-இல் அறிவியல், ஜூலை 4-இல் சமூக அறிவியம் நடைபெற உள்ளது.

பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத மாணவா்கள், செவ்வாய்க்கிழமை (மே 23) நண்பகல் 12 மணி முதல் மே 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

அதைத் தவறவிட்டால் தத்கல் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் மே31-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தோ்வுக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 500, பிளஸ் 1 வகுப்புக்கு ரூ. 1,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT