ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு சட்டப் போராட்டங்கள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசிய சாசன அமா்வும் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்று தீா்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடா்பாக கட்டுப்பாடுகள் என்ற போா்வையில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது மிகுந்த சிரமமாக உள்ளது. அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.