தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 92-ஆக குறைந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 17 போ், கோவையில் 16 போ் சிகிச்சையில் உள்ளனா். பொது சுகாதாரத் துறை தகவலின்படி திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் புதிதாக 7 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து 15 போ் குணமடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.