தொடக்கக் கல்வி, இடைநிலை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
இடைநிலை ஆசிரியா்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 22, 24, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு இணங்க இந்தக் கலந்தாய்வு 24, 25, 26, 29 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.