தமிழ்நாடு

சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை வாங்கிய நடிகர்

19th May 2023 06:54 PM

ADVERTISEMENT

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சென்னை அசோக் நகரில் உள்ள பூர்வீக வீட்டை நடிகர் சி.மணிகண்டன் வாங்கியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுந்தர் பிச்சை பிறந்த வீட்டை வாங்கியதில் பெருமை அடைகிறேன். சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததால், அவர் பிறந்த வீட்டை வாங்குவது உற்சாகமாக உள்ளது. சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சை தனது சொந்த செலவில் பழைய கட்டடத்தை இடித்து விட்டு அந்த இடத்தை ஒப்படைத்தார். 

ஆவணங்களை என்னிடம் ஒப்படைக்கும் போது அவர் கண்கலங்கினார். சொத்தின் உரிமையை மாற்றுவதற்கும், பதிவு செய்வதற்கும் தனது மகனின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பிச்சை கேட்டுக்கொண்டார். மேலும் சுந்தரின் தாய் தானே ஃபில்டர் காபி போட்டு அளித்தாகவும், அவரது தந்தை முதல் சந்திப்பிலேயே சொத்து ஆவணங்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் 20 வயது வரை இந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் படிப்பதற்காக 1989-ல் சென்னையை விட்டு அவர் சென்றார். சுந்தர் பிச்சையின் வீட்டை வாங்கிய சி.மணிகண்டன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : Sundar Pichai
ADVERTISEMENT
ADVERTISEMENT