தமிழ்நாடு

கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்! அரசுப் பள்ளிகளில் 87% தேர்ச்சி!

19th May 2023 10:15 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம், புதுவையில் 9.2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

தொடா்ந்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றப்பட்டன. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி 9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில் 91.39 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

மொழிப்பாடத்தில் 95.55%
ஆங்கிலம் 98.93%
கணிதம் 95.54%
அறிவியல் 95.75%
சமூக அறிவியல் 95.83%

100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்

ஆங்கிலம் 89 மாணவர்கள் 100க்கு 100 பெற்றுள்ளனர். 
கணிதம் - 3,649
அறிவியல் 3,584
சமூக அறிவியல் 320
தமிழ் பாடத்தில் ஒருவர் கூட நூறு மதிப்பெண்கள் பெறவில்லை.

தேர்ச்சி விகிதம் அதிகம்

கடந்த ஆண்டு 90.07 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் இருந்த நிலையில், இந்த ஆண்டு 91.39% சதவிகிதமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 

அரசுப் பள்ளிகளில் 87.45 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.24% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று தனியார் பள்ளிகளில் 97.38% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT