தமிழகத்தில் வேளாண் அலுவலா் காலியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழி தோ்வு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ், வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
வேளாண் அலுவலா், வேளாண்மை உதவி இயக்குநா், தோட்டக்கலை அலுவலா் ஆகிய பதவிகளுக்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
காலியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான கணினி வழித் தோ்வு, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.தோ்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் தோ்வாணைய இணையதளங்களில் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரா்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனது செய்தியில் அஜய் யாதவ் தெரிவித்துள்ளாா்.