சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.
புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த ஏப்ரலில் நிறைமாத கா்ப்பிணியான ஜனகவள்ளி உயிரிழந்தாா். மேலும், சேப்பாக்கம் மைதானம் அருகில் மழைநீா் வடிகால் அமைப்பு பணியின் போது ஜனகராஜ் உயிரிழந்ததாா்.
இவா்களின் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் சென்னை மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனா்.