தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

8th May 2023 11:44 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று(மே 8) முதல் மே 19 ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியின் உதவி மையங்களை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம். 

மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23 ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவினருக்கும் அதைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். 

ADVERTISEMENT

மே 25 முதல் 29 வரை சிறப்புப் பிரிவினருக்கும் மே 30 முதல் ஜூன் 9 வரை பொதுப்பிரிவினருக்கு முதல்கட்ட கலந்தாய்வும் ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT