எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி; திமுக எங்களுக்கு பொது எதிரி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (மே 8) இரவு 7 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் - பண்ருட்டி ராமச்சந்திரன் - டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
படிக்க | ஓபிஎஸ் - டிடிவி இணைந்து செயல்பட முடிவு: பண்ருட்டி ராமச்சந்திரன்
அப்போது பேசிய டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த மனக்கசப்பும் இல்லை. மனதளவில் எந்த பகையுணர்வும் இல்லை. எந்த சுயநலமும் இல்லை.
நேரில் சந்திக்கவில்லையே தவிர அடிக்கடி தொலைபேசியில் ஓபிஎஸ் உடன் பேசிக்கொண்டுதான் இருந்தேன்.
ஓபிஎஸ்ஸை நம்பி அவர் கைப்பிடித்து இருட்டில் கூட செல்ல முடியும். இபிஎஸ்ஸை நம்பி செல்ல முடியுமா? என செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.