தமிழ்நாடு

ஆன்மீகத்துடன் கூடிய தமிழ்தான் தமிழகத்திற்கு வளர்ச்சி தரும்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

DIN

ஆன்மீகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்துடன் கூடிய தமிழும், தமிழுடன் கூடிய ஆன்மீகமும்தான் தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும் என்று தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

வேலூர் அருகே ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக் கோயிலின் 31-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீசக்திஅம்மா தலைமையில் ஸ்ரீநாராயணி மூல மந்திர மகா யாகம், 10,008 மஞ்சள் நீர் கலச ஊர்வலம், பாத பூஜை, அம்மனுக்கு கலச அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
 விழாவில் புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

தமிழக கலசாரம் என்பது ஒரு ஆன்மீக கலாசாரமாகும். ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. எனவே, சமுதாயத்தில் ஆன்மீகம் தலைத்தோங்க வேண்டும்.

ஆனால், தமிழகத்திற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், ஆன்மீகத்தை தவிர்த்து தமிழ்தான் அனைத்திற்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அது ஏற்புடையதல்ல. ஆன்மீகத்துடன் கூடிய தமிழும், தமிழுடன் கூடிய ஆன்மீகமும்தான் தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும்.

எனினும், தூய்மையான இந்து ஆன்மீகத்தின் மீது சனாதனம், வருணாஷ்ரம் என்றும், அது சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் கொண்டு வந்ததாகவும் கருத்துக்கள் முன்னிறுத்தப்படுகின்றன. அது தவறான கருத்தாகும். ஆன்மீகத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. 

நம் இதிகாசங்களும், சரித்திரமும்கூட எல்லோரும் சமம் என்றே கூறுகின்றன. அந்தவகையில், எல்லோரும் இணைந்து செயல்படுவதுதான் ஆன்மீக கலாசாரமும், தமிழ் கலாசாரமும் ஆகும். 

அதேசமயம், எல்லோரையும் சமமாக கருதுவதாகக் கூறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து ஆன்மீக அன்பர்களுக்கு மட்டும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கூறுவதில்லை என்பது குறித்து கேள்வியெழுப்பி இருந்தேன். அவரிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. 

ஆளுநர்கள் வரம்பு மீறி பேசுவதாகவும், ஜனநாயகத்திற்கு சவால் விடுவதாகவும் தமிழக முதல்வர் கூறியிருப்பது குறித்து கேட்கிறீர்கள். 

தமிழக முதல்வரைப் போன்றே புதுவை முன்னாள் முதல்வர் நாராயணிசாமியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாத ஆளுநர்களுக்கு அதிகாரமில்லை என்று கூறிவருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் உள்ளநிலையில், ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கும் சில அதிகாரங்கள் உள்ளன. ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏன் ஆளுநரை சந்தித்தனர்.

இதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குத்தான் அதிகாரம் எனக்கூறும் நாராயணசாமி, புதுவை முதல்வராக இருந்தபோது மக்களுக்கு என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து என்ன செய்தார் என்பதும் எங்களுக்கு தெரியும். அதனால் அனைவரையும் மரியாதையுடன் பேச வேண்டும்.

நான் புதுவையில் அதிக நாள் தங்கியிருப்பதாகவும், உண்டியல் குலுக்கி புதுவைக்கும், ஹைதராபாத்திற்கும் விமானம் ஏற்பாடு செய்து தருவதாகவும் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணிசாமி கூறுகிறார். அவர் உண்டியல் குலுக்க தேவையில்லை, சேர்த்து வைத்திருந்த பணத்திலேயே ஏற்பாடு செய்யலாம். ஏற்கனவே, புதுவைக்கும், ஹைதராபாத்திற்கும் ஏற்கனவே நேரடி விமான சேவை உள்ளது. இதைக்கூட தெரியாமல் நாராயணசாமி பேசி வருகிறார் என்றார்.

ஆண்டுவிழாவையொட்டி ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீநாராயணி மூல மந்திர மகா யாகத்தில் பங்கேற்ற புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT