தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19-ல் துணைத்தேர்வு!

8th May 2023 11:15 AM

ADVERTISEMENT

 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி  துணைத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்தாண்டு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

மாணவிகள் 91.45 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகம். 

படிக்க: இந்தியாவில் 1,839 ஆகக் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

பிளஸ் 2 தேர்ச்சியில் முதல் மூன்று இடங்களை விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் பெற்றுள்ளது. 

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜூன் 19-ல் நடைபெறும் துணைத்தேர்வுக்கு வின்ணப்பித்து பங்கேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT