தமிழ்நாடு

உரிமமின்றி இயங்கிய நிறுவனத்தில் தயாரான 25 ஆயிரம் லிட்டா் குடிநீா் பறிமுதல்: வழக்குப் பதிய பரிந்துரை

8th May 2023 09:09 AM

ADVERTISEMENT


திருச்சி: திருச்சியில் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தில் தயாரான சுமாா் 25,000 லிட்டா் தண்ணீா் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி வயலூா் சாலை சோமரசம்பேட்டையில் உரிமமின்றி செயல்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலா்கள் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தில் தண்ணீா் உற்பத்தி செய்யக் கூடாது என தற்காலிகத் தடை விதித்தனா்.

ஆனால், அந்த நிறுவனத்தில் தடையை மீறி மீண்டும் முறைகேடாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சனிக்கிழமை அந்த நிறுவனத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டதில், சுமாா் 25,000 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் உற்பத்தி செய்து பாட்டில்கள், கேன்களில் அடைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அதிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பினா்.

ADVERTISEMENT

மேலும் அந்நிறுவன உரிமையாளா் மீது குற்ற வழக்குப் பதியவும், திருச்சி உறையூா் காவல் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT