தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் தேர்ச்சி

8th May 2023 12:11 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்தாண்டு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அந்தவகையில்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 89.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 523 மாணவ மாணவிகளில் 18,408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் நான்கு பள்ளிகளும் தனியார் பள்ளிகளில் 40 பள்ளிகளும் என மொத்தம் 44 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

ADVERTISEMENT

மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் 32-வது இடமாகும். கடந்த ஆண்டு 88.3 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 89.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கடந்த ஆண்டு விட 1.5% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT