தமிழ்நாடு

கர்நாடக தேர்தல்: கிருஷ்ணகிரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

8th May 2023 01:12 PM

ADVERTISEMENT

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 12-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் மே 10-ஆம் தேதி வரையும், மே 13-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், கர்நாடக - தமிழக எல்லையோரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளையும் குறிப்பிட்ட தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT