தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

8th May 2023 12:41 PM

ADVERTISEMENT

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை(மே 9ல்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். 

புயலாக உருவாகி 10-ம் தேதி வலுவடைந்து வங்கக்கடல் மியான்மரை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

படிக்க: பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை!

இதன் காரணமாக, மே 8(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, தேனி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும். 

மே 1-ம் தேதி முதல் இன்று வரை 16.5 செ.மீ மழை பொய்யுள்ளது. மேலும், 8 நாள்களில் 8 செ.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில் 114 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

படிக்க: வெறுப்பை உமிழும் தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT