தமிழ்நாடு

சந்திர கிரகணம் இந்திய நேரப்படி எப்போது ஏற்படும்?

3rd May 2023 07:35 PM

ADVERTISEMENT

 

நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரா பெளர்ணமியன்று நடைபெறவுள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாகத் தெரியும்.

இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் இருப்பவர்களால் பார்க்க முடியும். மேலும் பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் தெளிவாகப் பார்க்க முடியும். 

இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5ஆம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும். இந்திய நேரப்படி இந்த பகுதி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. 

ADVERTISEMENT

இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ஆம் தேதி அதிகாலை 01.01 மணிக்கு நிறைவடைகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT