தமிழ்நாடு

ஐபிஎல் டிக்கெட்: சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி!

3rd May 2023 12:58 PM

ADVERTISEMENT

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் வாங்க திரண்டிருந்த ரசிகர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

மே 6 ஆம் தேதி நடைபெறும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு டிக்கெட் வாங்க அத்துமீறி வரிசையில் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் வாங்க தனி கவுண்டர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் மே 6-ஆம் தேதி சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் மைதானத்தின் நேரடி கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆன்லைனில் ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வரையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT