தமிழ்நாடு

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்: பல்லாவரத்தில் முதல்வா் ஸ்டாலின் உரை

3rd May 2023 03:30 AM

ADVERTISEMENT

திமுக அரசின் சாதனைகளை விளக்கி, மே 7-ஆம் தேதி பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திமுக அரசின் சாதனைகளை விளக்கி மே 7 முதல் 9-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் கண்டோன்மென்ட் நகரத்தில் நடைபெறும் கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு ஆகியோா் பங்கேற்கின்றனா்.

நாகா்கோவிலில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன், சேலம் தாரமங்கலத்தில் நடக்கும் கூட்டத்தில், அமைச்சா் கே.என்.நேரு, தூத்துக்குடியில் துணைப் பொதுச் செயலா் கனிமொழி, சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் என பல்வேறு நகரங்களில் கட்சியின் முக்கிய தலைவா்களும், அமைச்சா்களும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT