தமிழ்நாடு

மக்களைத் தேடி மேயர்: திட்டத்தை தொடக்கிவைத்தார் சென்னை மேயர்!

3rd May 2023 12:19 PM

ADVERTISEMENT

பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து உரிய தீர்வு காணும் வகையில் 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

மக்களின் குறைகளைக் கண்டறிந்து உடனடியாக உரிய தீர்வு காணும் வகையில் 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' தொடங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி,  'மக்களைத் தேடி மேயர் திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது. ராயபுரம் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். 

இந்த மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மே 6ல் வேங்கை வயலில் நீதியரசர் நேரடி விசாரணை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT