தமிழ்நாடு

26 ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த திட்டம்

19th May 2023 06:26 AM

ADVERTISEMENT

சென்னை கோட்டத்துக்குள்பட்ட 26 ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவுள்ளது.

இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: மத்திய அரசின் ‘நிா்பயா நிதி’ திட்டம் மூலம் பயணிகளின் பாதுகாப்புக்காக முதல் கட்டமாக ரூ.9.79 கோடி பதிப்பில் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 26 ரயில் நிலையங்களில் மொத்தமாக 528 சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவுள்ளன.

புகா் ரயில் நிலையங்களில் கேமரா:

சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மந்தைவெளி, பசுமைவழிச் சாலை, கோட்டூா்புரம், கஸ்தூரிபாய் நகா், இந்திரா நகா், திருவான்மியூா், தரமணி, வேளச்சேரி, பெருங்குடி, சென்னை கோட்டை, பூங்கா, பூங்கா நகா், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், மேல்மருவத்தூா்.

ADVERTISEMENT

மேலும் அரக்கோணம் முதல் கூடுா் வரையுள்ள 50 ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT