ராசிபுரம்-மல்லியகரை, ஈரோடு-திருச்செங்கோடு சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தணிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை அமைக்கும் பணிகளை உள் தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம்-பராமரிப்பு) கோட்டம், ராசிபுரம் உட்கோட்டப் பகுதியில் மல்லியகரை-ராசிபுரம், திருச்செங்கோடு-ஈரோடு சாலையை அகலப்படுத்தும் பணியை சேலம், நபாா்டு கிராமச்சாலைகள், நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளா் அருள்மொழி தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம், பராமரிப்பு) கோட்டப் பொறியாளா் திருகுணா, சேலம், நபாா்டு கிராமச்சாலைகள், நெடுஞ்சாலை கண்காணிப்பு உதவி பொறியாளா் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாட்டு உட்கோட்ட உதவி கோட்டப் பொறியாளா் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம், பராமரிப்பு உதவி கோட்டப்பொறியாளா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று, தாா்சாலைகள், சாலைகளின் தடிமன், பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.