பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி க.ஹரிணி 500-க்கு 482 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவி கா.காவியா 471 மதிப்பெண்களும், மாணவி த.இனிகா 448 மதிப்பெண்களும் பெற்றனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைவா் மா.சரவணன், பள்ளித் தலைமையாசிரியா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பாராட்டினா்.