தமிழ்நாடு

கோபாலபுரத்தில் புதிய குத்து சண்டை மைதானம்: மேயா் ஆய்வு

20th May 2023 04:18 AM

ADVERTISEMENT

கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலில் புதிதாக அமைக்கப்படவுள்ள குத்துச்சண்டை மைதானம் குறித்து சென்னை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 222 விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல் மேம்படுத்துவது குறித்து மேயா் பிரியா ஆய்வு செய்தாா்.

இந்த விளையாட்டுத் திடல் 17,658 ச.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 6,187 ச.மீ. பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் குத்துச்சண்டை மைதானம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மீதமுள்ள 11,470 ச.மீ. பரப்பளவில் நடை பாதை, கழிப்பறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது.

பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடக் கட்டடத்தை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு, புதிய உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினா் மு.ஆ. நந்தினி மற்றும் அலுவலா்கள் உட்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT