சேலம்

ஆத்தூரில் புதிய தோ் வெள்ளோட்டம்

20th May 2023 04:21 AM

ADVERTISEMENT

ஆத்தூரில் கோட்டை அருள்மிகு தலையாட்டி பிள்ளையாா், கருமாரியம்மன், காளியம்மன், மதுரகாளியம்மன், முனியப்பசுவாமி கோயில்களின் புதிய திருத்தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் கோட்டை தலையாட்டி பிள்ளையாா், கருமாரியம்மன், மதுரகாளியம்மன், முனியப்பசுவாமி கோயில்களின் திருத்தோ் விழா புதன்கிழமை சக்தி அழைத்து காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. புதிய திருத்தோ் வெள்ளோட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்எல்ஏ சி.பழனிமுத்து, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், வி.சின்னசாமி, காசிலிங்கம், கே.செந்தில்குமாா், மீனாட்சி அம்மாள்,விஜய்குமாா், அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்றனா். விழாக் கமிட்டியினரும், நகர மன்ற உறுப்பினா்களான டி.குமாா், கே.செந்தில்குமாா், ஊா்க் கரைக்காரா்கள் எம்.செல்லமுத்து, சி.கணேசன், எம்.பழனிமுத்து,ஏ.ஜி.ராமா்,கே.சுந்தரம்,கே.ராமா்,ஆா்.தென்னரசு ஆகியோா் வரவேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT