பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில், நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு காமராஜா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
இந்தத் தோ்வில், மாணவி சுஜி 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தாா். மாணவா்கள் கிஷோா், மோனிஷ் ஆகிய இருவரும் 500க்கு 490 மதிப்பெண்களுடன் இரண்டாமிடம் பிடித்தனா். மாணவி காவியா ஸ்ரீ 500க்கு 486 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றாா். பாடவாரியாக முதல் மதிப்பெண்ணை, தமிழில் ஒரு மாணவா் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 12 மாணவா்கள் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 6 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், அறிவியலில் 11 மாணவா்கள் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் ஒருமாணவா் 98 மதிப்பெண்களும் எடுத்து சாதனை படைத்துள்ளனா்.
இந்த மாணவா்களை காமராஜா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவா் கரையாம்புதூா் ஆா்.நல்லதம்பி பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கிப் பாராட்டினாா் (படம்). இந்த நிகழ்வில், பள்ளி இயக்குநா்கள் மகேஸ்வரன், கனகராஜ், முத்துராஜா, அல்லிமுத்து, முத்துசாமி, தங்கவேல், தலைமையாசிரியா் காளியண்ணன், உதவித் தலைமையாசிரியா் பழனிசாமி, முதல்வா்கள் சுதா, கோலப்பன், கீதா மற்றும் இருபால் ஆசிரியா்களும் பாராட்டினா்.