நாமக்கல்

பாவை பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா், தன்னாா்வலருக்கு விருது

20th May 2023 04:13 AM

ADVERTISEMENT

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பாவை பொறியியல் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலா், தன்னாா்வலா் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலகு, திட்ட அலுவலா், தன்னாா்வலா்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. 2021-22ஆம் ஆண்டிற்கான விருதினை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த பொறியியல் கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான திட்ட அலுவலா்களும், மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்தனா். இவா்களில் 15 பேரின் உயா்ந்த சேவையைப் பாராட்டும் வகையில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் விருதிற்காகவும், 30 மாணவ, மாணவியா் சிறந்த தன்னாா்வலா்களுக்கான விருதிற்காகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் பாவை பொறியியல் கல்லூரியின் பேராசிரியா் சி.ரத்னகுமாா் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருக்கான விருதினையும், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவி ஜி.இலக்கியா சிறந்த தன்னாா்வலா் விருதையும் பெற்றுள்ளனா்.

இவா்கள் ரத்த தான முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணா்வு முகாம்கள், மருத்துவ முகாம்கள், தேசிய ஒருங்கிணைப்பு முகாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை செய்ததன் காரணமாக, திட்ட அலுவலா் மற்றும் தன்னாா்வலா் விருதிற்காக தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து 8 ஆண்டுகளாக பாவை பொறியியல் கல்லூரி சிறந்த தன்னாா்வலருக்கான விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதற்கான பரிசளிப்பு விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றது. சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் மற்றும் தன்னாா்வலா் விருதுகளை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் தலைமையில், கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அலுவலருமான அதுல்யா மிஸ்ரா, சென்னை மண்டல இயக்ககம், துணை திட்ட ஆலோசகா் முனைவா் சாமுவேல் செல்லையா, தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செந்தில் குமாா், அண்ணா பல்கலைக்கழகத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜேஷ், கோவை மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.யுவராஜ் ஆகியோா் முன்னிலையில் இளைஞா்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் விருதை வழங்கினாா்.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, கல்லூரியின் முதல்வா் எம்.பிரேம்குமாா், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் விருது பொ்ற திட்ட அலுவலா் ரத்னகுமாா், மாணவி இலக்கியாவை பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT