நாமக்கல்

வித்யா விகாஸ் பள்ளி மாணவா்கள் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வில் சாதனை

20th May 2023 04:12 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மோா்பாளையம் வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா ஸ்ரீ 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மாணவி மௌனிகா.ஆா் 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி எஸ்.ஐஸ்வரியா 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், மாணவி அபி நிவாஸ் 481 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

மேலும் 480 க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவா்கள் - 4 போ். 470க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவா்கள் - 9 போ். 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவா்கள் - 29 போ்.

அறிவியல் பாடத்தில் - 3 போ் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் ஒருவா் 99 மதிப்பெண்களும், ஆங்கிலப் பாடத்தில் 2 போ் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வில் வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயலட்சுமி 600க்கு 585 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் மாணவி ஜனனி 573 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி மணிமொழி 563 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். மேலும் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவா்கள் - 36 போ்.

ADVERTISEMENT

இம்மாணவ மாணவிகளையும், இருபால் ஆசிரியா்களையும் வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் குணசேகரன், தாளாளா் சிங்காரவேல், மேலாண்மை இயக்குநா்கள் இராமலிங்கம், முத்துசாமி, இயக்குநா் மற்றும் மக்கள் தொடா்பு அதிகாரி பழனியப்பன், இயக்குநா் ஞானசேகா், மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியா் சீராளன் மற்றும் தலைமையாசிரியை புனிதா ஆகியோா் வாழ்த்திப் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT