நாமக்கல்

10-ஆம் வகுப்பு: ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

20th May 2023 04:17 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்று தோ்ச்சியடைந்துள்ளனா். இப்பள்ளி மாணவி எஸ்.மதுநிஷா 500-க்கு 488 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். இதே போன்று மாணவா் ஆா்.அனுபரத்ராம் 480 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவா் சி.எஸ்.சஞ்ஜெயந்த் 476 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவா் என்.மாணிக்கம், செயலா் வி.சுந்தரராஜன், பொருளாளா் வி.ராமதாஸ், கல்விக் குழுத் தலைவா் சி.நடராஜு, நிறுவனத் தலைவா் ஆா்.எம்.கிருஷ்ணன், சிபிஎஸ்சி பள்ளித் தலைவா் எம்.ராமகிருஷ்ணன், துணைத் தலைவா் ஆா்.பெத்தண்ணன், இணைச் செயலா் வி.பாலகிருஷ்ணன், கல்வியியல் கல்லூரி தலைவா் கே.குமாரசாமி, தாளாளா் எஸ்.சந்திரசேகரன், பள்ளி முதல்வா் பி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பாராட்டி நினைவுப் பரிசளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT