தமிழ்நாடு

திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் கோயிலில் திருத்தேரோட்டம்

DIN

மண்ணச்சநல்லூர்: திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள் பிரம்மோத்ஸவ விழாவில் சனிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறையில் அமைந்துள்ளது புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் உபகோயிலான இத்திருக்கோயில் 108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய தேஷமாக விளங்கும் இத்தலம் ஸ்வதேகிரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் பிரமோத்ஸவ விழாவானது மார்ச் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

கண்ணாடி அறையிலிருந்து பெருமாள், தாயார் புறப்பாடாகி மீன லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். 

இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்ததுபோல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT