தமிழ்நாடு

ஓபிஎஸ் தரப்பு வழக்கு: இபிஎஸ் அவசர ஆலோசனை

DIN

சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஏற்படும் சட்டச் சிக்கலை மேற்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி மூத்த  நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடைக்கோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசரமாக  சென்னை உயர் நீதிமன்றத்தில்  முறையீடு செய்துள்ளார்.

அவசர வழக்காக முறையீடு செய்ய மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி  அனுமதி அளித்துள்ளார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ் பாபு நாளை(மார்ச் 19) காலை 10 மணிக்கு விசாரிக்கவுள்ளார்.

சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என சற்றுமுன் ஓபிஎஸ் தரப்பு அறிவித்த நிலையில், உயர் நீதிமன்றத்தில்  அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுவை இன்று(சனிக்கிழமை) அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். 

இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

பரமத்தி வேலூரில் ரூ. 36 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

SCROLL FOR NEXT